திருமண நாளன்று மணமகன் வீட்டுக்கு சென்று முஸ்லீம் மணமகள் செய்த செயல்! இரு வீட்டார் சம்மதத்துடன் அரங்கேறிய புதுமை!

டாக்கா: திருமண முறையில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு சம்பிரதாயத்தை மணப்பெண் ஒருவர் மாற்றியுள்ளார்.


ஆம், வங்கதேசத்தில் பொதுவாக, திருமணம் செய்துகொள்ளும் மணமகன்தான், மணமகள் வீட்டிற்குச் சென்று, அவரை திருமணம் செய்து, தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இது வங்கதேசம் மட்டுமல்ல, இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்து, முஸ்லீம் உள்பட பல்வேறு மதத்தினரும் பின்பற்றும் வழக்கமாக உள்ளது.  

இந்நிலையில், இந்த சம்பிரதாயத்தை மாற்றியமைப்பது என, வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முடிவு செய்தார். காதிசா என்ற அப்பெண், இஸ்லாமிய வழக்கத்தை மீறி, மணமகன் வீட்டிற்குச் சென்று மணமகனை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார். இதற்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவே, சமீபத்தில் காதிசாவின் திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதுபற்றி அவர் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட, தற்போது காதிசாவின் திருமணம் வைரலாக பரவி வருகிறது. 

ஆனாலும் விமர்சனங்களை பொருட்படுத்தாத காதிசா, ''பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் சம்பிரதாயத்தை மாற்றி அமைப்பது மட்டுமே என் நோக்கம். பெண் விடுதலை என்பதற்கு இது சரியான வழியாகும். அதனால், நானே மணமகன் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்ய தீர்மானித்தேன்.

ஆண்களுக்கு பெண்களும் சரிநிகர் என்பதால், இதற்கு என் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டார்கள். ஆனால், வெளியில் பலரும் விமர்சிக்கிறார்கள். இதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் போல மாற்றத்தை விரும்பும் பெண்கள், எதிர்காலத்தில் செயல்படுவார்கள் என நம்புகிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.