கொழுப்பைக் கரைக்குமே காளான்

மிகவும் சுவையான உணவுப்பொருளாக கருதப்படும் காளான் இப்போது செயற்கை முறையில் வளர்க்கப்படுவதால் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கிறது. இவற்றில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன.

  • ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உண்டு.,
  • ரத்த நாளங்கள் சுத்தமடைவதால் இதயம் பலமாகி சீராக செயல்பட முடிகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் காளானுக்கு உண்டு.
  • குழந்தை இல்லாமல் அவதிப்படும் தம்பதியருக்கு கருப்பை மற்றும் விந்துப்பை குறைபாட்டை நீக்குகிறது.
  • நோஞ்சானாக இருப்பவர்கள் தினமும் காளான் சூப் குடித்துவந்தால் தோலில் மினுமினுப்பும் உடல் பலமும் கிட்டும்.