கல்லூரி மாணவி அரை நிர்வாண நிலையில் எரித்துக் கொலை! புதுச்சேரியில் விபரீதம்!

புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் இருந்து ஆரோவில் செல்லும் வழியில் ராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி அருகே 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் எரிந்து கருகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

அந்த பெண் சடலம் அரை நிர்வாண நிலையில் வெறும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் கிடந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

உடல் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் கல்லூரி இருக்கிறது- எனவே அவர் கல்லூரி மாணவியாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அந்த மாணவி யார் என்று மோப்பநாய் உதவியுடன் அங்கு போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.