நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்! இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

அறை தோழர்கள் நிர்வாணப்படுத்தி, புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


பால்கர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராகுல் மிஸ்ரா என்ற அந்த இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி, போய்சர் பகுதியில் உள்ள ஆர்த்தி டிரக்ஸ் என்ற நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சில வாரம் முன்பாக, இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, வாடகை அறையில் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

அதில், போதை தலைக்கேறி, குறிப்பிட்ட இளைஞர் மயங்கிவிட்டார். மறுநாள் விடிந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். போதையில் மயங்கிய அவரின் உடைகளை அவிழ்த்து, நிர்வாணப்படுத்தி, அவரது நண்பர்கள் வீடியோ, போட்டோ பிடித்துள்ளனர். இந்த புகைப்படங்களை வைத்து, அவரை மிரட்டி வந்திருக்கின்றனர். 

இதனால், மன உளைச்சல் அடைந்த இளைஞர் ராகுல் மிஸ்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.