காதலன் கற்பழித்துவிட்டான்! காவல் நிலையத்தில் கதறிய காதலி! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் தன்னை 8 ஆண்டுகளாகக் காதலித்த நபர் ஏற்கனவே திருமணமானவன் என அறிந்த பெண் அந்த நபர் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு நடன விடுதியில் பணியாற்றிய போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினாய் பாலகிருஷ்ணா என்ற நபரை சந்தித்தார். அவர்களிடையே பழக்கம் வளர்ந்த நிலையில் பாலகிருஷ்ணா திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் உறவுக்கு காட்டயப்படுத்தி நினைத்ததை சாதித்துக் கொண்டார். 

இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா துபாயில் தனது தொழிலைக் கவனிக்கச் செல்வதாக கூறிவிட்டுப் புறப்பட்ட போது அந்தப்பெண் தான்கருவுற்றிருப்பதை தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்ததையடுத்து அந்தப் பெண்ணை அந்தேரியில் வீடு எடுத்து தங்கவைத்துவிட்டு பாலகிருஷ்ணா துபாய் சென்றதாகக் கூறப்படுகிறது. 

வீட்டுக்கான வாடகையை தொடர்ந்து செலுத்தி வந்த பாலகிருஷ்ணா கடந்த 2017-ஆம் ஆண்டு சில வணிகப் பிரச்சினைகளால் தன்னால் வாடகையைக் கட்ட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பால்கிருஷ்ணாவின் ஃபேஸ்புக் பதிவுகளைப்பார்த்த போது அவர் ஏற்கனவே திரூமணமானவர் எனத்  தெரியவந்தது.

அந்தப் பெண் இது குறித்து பாலகிருஷ்ணாவிடம் கேட்ட போது. விளைவுகள் கடுமையாகை இருக்கும் என பாலகிருஷ்ணா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த்ப் பெண் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் பாலகிருஷ்ணாவை பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.