மனைவியை சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தளித்த கொடூரன் மும்பையில் நடந்த பயங்கரம்

மும்பையில் மனைவியை தனது இரு சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய 35 வயது நபரையும் மற்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


முன்னாள் அழகு கலைஞரும் தற்போது விளம்பரத்துறையில் இருப்பவருமான 30 வயது பெண் ஒருவர் கோபார் கைரேனே என்ற இடத்தைச் சேர்ந்தஅந்த நபரை இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் 15 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு அவன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களால் கொடுக்க முடியாததை அடுத்து அவன் அவரது மகளும் தனது மனைவியுமான அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்யத் தொடங்கினான். அதன் உச்சகட்டம் மிகவும் கொடூரமானது தனது மனைவியை தனது இரு சகோதரர்களும் நண்பர்களும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த அவன்அதற்கு தூண்டுகோலாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

சித்திரவதையை பொறுக்க முடியாத அந்தப் பெண் இறுதியாக வீட்டை விட்டு வெளியேறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கேடுகெட்ட அந்த நபரையும் அவனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களையும் கைது செய்து கூட்டுப் பாலியல் பலாத்காரம், பெண்மைக்கு எதிரான கொடூரம், இயற்கைக்கு மாறான பாலியல் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்