மும்பை: எரிகா ஃபெர்னாண்டஸ் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஆடை கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பலர் முன்னிலையில் திடீரென விலகிய மேலாடை! நடிகைக்கு விழா மேடையில் ஏற்பட்ட விபரீதம்!
நடிகை எரிகா ஃபெர்னாண்டஸ் கஸோடி ஜிண்டாகி கை 2 என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான புரோமோ நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் எரிகா ஃபெர்னாண்டஸ் வரவழைக்கப்பட்டார்.
அப்போது, ரெட் கார்பெட்டில் நின்றபடி, புகைப்படக்காரர்களுக்கு அவர் போஸ் தந்தார். வெள்ளை நிற மேலாடை அணிந்திருந்த அவர், சிரித்தபடி அனைவருக்கும் போஸ் தர, திடீரென அவரது உடை கிழிந்து, உள்ளாடை தெரிய ஆரம்பித்தது.
இதனை கவனித்ததும் எரிகா அதிர்ச்சியடைந்தார். உடையை இழுத்து சரிசெய்ய அவர் முயன்றார். ஆனால், அந்த உடையின் ஒரு பகுதி கிழிந்து, கையோடு வந்துவிட்டது. இதனை பார்த்ததும் செய்வதறியாது அவர் திகைத்தார். உடனடியாக, அங்கிருந்த சக நடிகைகள் அவரை சூழ்ந்துகொண்டு, ஊடகத்தினர் பார்வையில் இருந்து மறைத்தபடி, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.