சொகுசு வீட்டில் துணை நடிகைகள் விபச்சாரம்! ஒரே நேரத்தில் சிக்கிய 160 அழகிகள்! எங்கு தெரியுமா?

மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 160 பெண்கள் மீட்பு


மும்பை: மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 160 பெண்கள் மீட்கப்பட்டனர்.

இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சோதனை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. தெற்கு மும்பை பகுதியில் உள்ள சிம்பிளெக்ஸ் பில்டிங் என்ற இடத்தில் ஏராளமான பெண்களை வைத்துக் கொண்டு, வெளிப்படையாகவே பாலியல் தொழில் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், டிசிபி ராஷ்மி கரண்டிகார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

மொத்தம் 75 ரூம்கள் உள்ள அந்த கட்டிடத்தில், ஒவ்வொரு ரூம்களிலும் பெண்களை அடைத்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவழைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இது போலீஸ் சோதனையில் தெரியவந்தது. அத்துடன் அங்கே இருந்த ஆண் மற்றும் பெண் புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களின் பிடியில் இருந்த சுமார் 160 பெண்களையும் போலீசார் மீட்டனர். அவர்களில் சிலர் துணை நடிகைகள்.

இந்த கட்டிடத்தில் அரசியல் செல்வாக்குடன் இவர்கள் பெண்களை கடத்தி வந்து,  பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். அனைவரின் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.