4 வயது சிறுமியுடன் இயற்கைக்கு மாறான உறவு! போலீஸ் கான்ஸ்டபிள் செய்த தகாத செயல்!

4 வயது சிறுமியிடம் காம லீலை நடத்திய போலீஸ் நபர் கைது செய்யப்பட்டார்.


மும்பையில் உள்ள டார்தியோ லோக்கர் ஆர்ம்ஸ் பிரிவில், சஞ்சய் வாக்மோடே என்ற நபர் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார். 32 வயதான சஞ்சய், வடாலா பகுதியில் உள்ள பர்காடாலி நாகா எனும் இடத்தில் வசித்து வருகிறார். போலீசாக இருந்தாலும், இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூன் 14ம் தேதி சஞ்சய், ஒரு 4 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்திருக்கிறார். 

இதேபோல, ஜூன்18ம் தேதியும் அந்த சிறுமியை அழைத்துச் சென்று, சாக்லேட் தருவதாக, தனது ஜிப்பை கழட்டி காட்டி மிரட்டியிருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவரது வீட்டை விட்டு ஓடிவந்து, தனது குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லியிருக்கிறாள். 

உடனடியாக, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய் வடாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையேற்று, போக்சோ சட்டத்தின்கீழ், அந்த நபர் மீது வழக்குப் பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாக  இருந்துகொண்டு சிறுமியிடம் சில்மிஷம் செய்து கைதான நபரை பற்றி பலரும் புகார் கூறி வருகின்றனர்.

இவர் ஏற்கனவே பணியில் இருந்தபோதே, சக பெண் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வார் என்றும், கூறுகிறார்கள். மொத்தத்தில், அந்த சைக்கோ நபரை கைது செய்ததை அவர் சார்ந்த போலீஸ் துறையினரே பாராட்டுகின்றனர்.