மெட்ரோ நகரங்களை கலக்கும் செல்போன் விபச்சாரம்! ஒரே ஒரு கால்! ஓடோடி வரும் அழகிகள்! பொறி வைத்து பிடித்த போலீஸ்!

மும்பை: ஸ்பா என்ற பெயரில் விபசார தொழில் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஷாக்கிநகா  பகுதியில் உள்ள பெனின்சுலா கிராண்ட் ஓட்டலில், விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சோதனை நடத்திய போலீசார், ஸ்பா என்ற பெயரில் ஒரு விபசார விடுதி நடப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அதன் உரிமையாளர் ரஜ்னீஷ் சிங் (30 வயது) என்பவரை கைது செய்தனர். 

இந்த நபர் லோயர் பரேல் பகுதியில் மாரத்தான் ஐகான் டவர் என்ற பெயரில் கால் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார். கால் சென்டர் தொழில் மூலமாக சிக்கும் வாடிக்கையாளர்களை ஸ்பா விடுதிக்கு அழைத்து, விபசாரம் செய்வதை ரஜ்னீஷ் வழக்கமாகச் செய்து வந்திருக்கிறார்.

இதுதவிர , தனது  ஸ்பா தொழிலை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே செய்து தருவதாகவும் கூறி செய்தித்தாள்களில் விளம்பரமும் செய்திருக்கிறார். அதில், தனது கால் சென்டர் தொலைபேசி எண்ணை மட்டும் கொடுத்திருக்கிறார். 

இதை வைத்துத்தான் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். படிப்படியாக, அந்த நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.