ரெக்கார்ட் டான்ஸ்! 13 அழகிகளை அலேக்காக தூக்கிய போலீஸ்!

மும்பை: பாரில் நடனமாடிய 13 பெண்கள் மற்றும் மேனேஜர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் உள்ள வாசை என்ற இடத்தில் இயங்கும் பார் ஒன்றில் பெண்களை  வைத்து, ஆபாச நடனம் நடத்தப்படுவதாக, உள்ளூர் பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாறு வேடத்தில் போலீசார் அந்த பாரில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கே 13 பெண்கள் கிளுகிளுப்பாக நடனமாட, வாடிக்கையாளர்கள் வாயை பிளந்துகொண்டு சரக்கடித்து போதையில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து,  நடனமாடிய 13 பெண்கள், பார் மேனேஜர் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில், மது விடுதி உள்ளிட்ட இடங்களில், ஆபாச பாடல்கள் மற்றும் நடனமாடுவது தடை விதிக்கப்பட்ட குற்றமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.