மும்பை நகரத்தின் பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நடன மற்றும் மது விருந்தில் கலந்து கொண்டதில் 15க்கும் மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கைது செய்யபட்டுள்ள சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஸ்டார் ஓட்டலில் அழகிகளுடன் அரசு உயரதிகாரிகள் உல்லாச நடனம்! கூத்தடித்தவர்களுக்கு செம ஆப்பு!

மும்பை மாநகரம் பகலில் எவ்வளவு பரபரப்பாக இயங்குகிறதோ அதே போல இரவிலும் கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாமல் இருப்பதும் அனைவரும் அறிந்தது, பார்டி நகரமாக விளங்கும் மும்பையின் நேற்று இரவு ஒரு நட்சத்திர விடுதியில் பார்டி நடைபெற்ற்து. முறையான அனுமதி பெறாமல் பார்டி நடத்தபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடிரென சோதனை நடத்திய போலீசார் அந்த விடுதியின் நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஆறு வாடிக்கையாளர்கள் என துணை முனிசிபல் கமிஷனர் , தொழிலதிபர், அரசாங்க உயர் அதிகாரி மற்றும் சில உயர்மட்ட நபர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
இது குறித்து கூறும் போது இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவிலும், மகாராஷ்டிரா ஹோட்டல் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்பு அவர்கள் ஜாமினில் விடுவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்