மனைவியை உறங்க வைத்துவிட்டு மச்சினிச்சியுடன் உல்லாசம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

இரவுக் காவலாளி ஒருவன், அனைவரும் உறங்கிய பின் மனைவியின் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவனுக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் இரவு காவலாளியான அக்கவின் கணவன் ஒரு நாள் இரவு அனைவரும் உறங்கிய பின் பணியை விட்டுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த போது தனது சகோதரி பதற்றமடைந்துவிடக்கூடும் என அஞ்சி தான் போராடவோ சத்தமிடவோ இல்லை என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். இந்நிலையில் சில நாள் கழித்து அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் வாந்தி உள்ளிட்டவை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் கருவுற்றிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து குடும்பத்தினர் விசாரித்த போது தனது சகோதரியின் கணவனின் லீலையை அந்தப் பெண் விவரித்தார். இதையடுத்து அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.