ஹீரோயின் ஆசை! 51 வயது நபருடன் செக்ஸ் உறவு! பிறகு 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

சினிமா ஆசை காட்டி மைனர் பெண்ணை மும்பை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மும்பையில் சினிமா நடிக்கும் வாய்ப்பு பெற்று தரும் தொழில் செய்து வருபவர் தாகீர் ஹாசன் கான்.  51 வயதாகும் இவர், வட இநதிய மாநிலத்தைச் சேர்ந்த மைனர் சிறுமியிடம் தன்னை ஒரு சினிமா டான்ஸ் மாஸ்டர் என அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். அத்துடன், பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை மும்பை அழைத்து வந்துள்ளார்.

மும்பையில், தனது கஸ்டடியில் 2 ஆண்டுகள் அந்த சிறுமியை வைத்துக் கொண்டு, அடிக்கடி பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து, மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமிக்கு, 17 வயதான நிலையில், அவர் போலீசில் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த மால்வாணி பகுதி போலீசார், தாகீரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.