அலுவலகத்தில் பெண் ஊழியர் உடை மாற்றும் வீடியோ! செல்போனில் பதிவு செய்த ஆண் ஊழியர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

பெண் உடை மாறறும்போது படம்பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


அந்தேரி கிழக்குப் பகுதியில் மரோல் நாகா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 35 வயது பெண் ஒருவர் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிற்பகலில், உடை மாற்றுவதற்காக, ஓய்வறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கே ஒரு மொபைல் ஃபோன் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை, கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதை எடுத்து பார்த்தபோது, உடை மாற்றும் காட்சிகள் அப்படியே வீடியோ எடுக்கப்பட்டதை பார்த்து அவர் செய்வதறியாது திகைத்தார். உடனடியாக, இதனை எடுத்து, நிறுவன மேலாளரிடம் அவர் புகார் அளித்தார். ஃபோன் உரிமையாளர் யார் என, மேலாளர் கேட்டதற்கு, யாரும் பதில் அளிக்கவில்லை. உடனே, சாகர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக, புகார் தரப்பட்டது.

இதையடுத்து, வழக்குப் பதிந்த போலீசார், ஃபோனுக்குச் சொந்தக்காரரான  அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ் என்பவரை கைது செய்தனர். பல மாதங்களாக, இப்படி கேமிரா ஃபோனை ஒளித்து வைத்து, பெண்களை ஆபாச படம்பிடித்து, அவர் ரசித்து வந்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.