கோஹ்லி அணியை கதறவைத்து TOP 3க்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரண்கள் எடுத்தது. 

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 ரண்களும், மொயிண் அலி 50 ரண்களும் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி 8 ரண்களில் ஆட்டமிழந்தார்.மும்பை தரப்பில் லசித் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

172 என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியின் தொடக்கம் சரவெடியாக இருந்தது. டி காக் மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 70 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய டி  காக் 40 ரன்களும் , ரோஹித் சர்மா 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் மிடில் ஓவர்களில் பெங்களூர் அணி சிறப்பாக பந்து வீசி மும்பை அணியினரை  கட்டுப்படுத்தினர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரண்கள் தேவைப்பட்டன. பவான் நெகி வீசிய 19-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் எடுத்தார். ஒரே ஓவரில் 22 ரண்களை அடித்து மும்பை அணிக்கு 5-ஆவது வெற்றியை பெற்று தந்தார். ஹர்திக் பாண்டியா அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். 

ஆட்ட நாயகன் விருதை மலிங்கா வென்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்திற்கு மும்பை அணி முண்ணேறியது. பெங்களூர் அணி 7-ஆவது தோல்வியை சந்தித்தது.