டாய்லெட் தண்ணீரில் சுடச்சுட தயாராகும் சட்னி! எந்த ஓட்டல் தெரியுமா?

தெருவோர இட்லி கடைக்காரர் ஒருவர் அருகில் உள்ள ரயில்வே நிலைய கழிப்பறையில் இருந்து தண்ணீர் எடுத்து சட்னி செய்வதற்காக தனது கடைக்கு கொண்டு வருவதை வீடியோவாக பதிவு செய்த ஒரு நபர் அதை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார் .


இந்நிலையில் அந்த வீடியோ  சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டடு வருகிறது. இந்த வீடியோவில் போரிவலி ரயில்வே நிலையத்தில் உள்ள கழிப்பறைக் குழாய் தண்ணீரை உணவு சமைக்க பயன்படுத்து பயன்படுத்துவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டபின் உணவும் மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தியது.

இந்த வீடியோவில் இட்லி கடை நடத்தி வருபவர் கழிப்பறைக் குழாய் தண்ணீரை பயன்படுத்தி சட்னி செய்யப் பயன்படுத்துகிறார்.இந்த வீடியோ 45 நிமிடம் உள்ளது. இது என்ன தேதியில் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.இதுகுறித்து சைலேஷ் ஆதவ் உணவு மற்றும் மருந்துகள் அமைப்பகத்தின் மும்பை கிளையின் ஆய்வாளர் பேசியபோது “இந்த வீடியோ எங்களின் கவனித்திற்கு வந்தது. இது குறித்த விசாரணையைத் தொடங்கினோம்.

இந்தமாதிரி குறு வணிகர்கள் இந்த மாதிரி தண்ணீரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல இதனால் பெருமளவு பாமரமக்கள் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.பின்னர் இவ்வாறு முறைகேடாக செயல்படும் கடைகளில் உரிமத்தை ரத்து செய்வதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.