ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் தகாத உறவு! உல்லாசமாக இருந்த என்ஜினியருக்கு நேர்ந்த விபரீதம்!

ஒரே நேரத்தில் 3 பெண்களுடன்தகாத உறவில் இருந்த என்ஜினியர் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.


மும்பை அருகே உள்ள வாசை பகுதியில், அவினாஷ் மற்றும் அவரது தோழி சீமா விஸ்வகர்மாவும், நெடுஞ்சாலை ஓரமாக உள்ள ரெஸ்டாரன்டில் டின்னர் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்துவிட்டு, வீடு திரும்பிய வழியில், அவர்களை வெர்சோவா பாலம் அருகே நின்று தகாத செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், திடீரென கையில் வைத்திருந்த ஆசிட்டை அவினாஷ் மீது வீசி தாக்கிவிட்டு, தப்பியோடினான். இதில், அவினாஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். அவரது தோழி சீமாவும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட அவினாஷ், மெரைன் என்ஜீனியர் ஆவார். திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலமாக சீமாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் வேறு சில பெண்களுடனும் அவினாஷ் தகாத உறவில் இருந்துள்ளார். மேலும் அவர்களை ஒரு கட்டத்தில் ஒதுக்கிவிட்டு வேறு பெண்களை தேடிச் சென்றுள்ளார்.

இதனால் ஏற்பட்ட பகையில் தான் அவினாஷ்  கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது செல்போனில் எண்ணற்ற பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். கொலையாளிகளை போலீஸ் தொடர்ந்து தேடி வருகிறது.