இளம் மகளை வீட்டிற்குள் போட்டு பூட்டிச் சென்ற தந்தை! பிறகு அரங்கேறிய கொடூரம்!

மும்பையில் உள்ள தாதர் (மேற்கு) பகுதியில் உள்ள போலீஸ் காலணியை சேர்ந்த ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 16 வயது மதிக்கதக்க இளம் பெண் உடல் மீட்கபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மும்பையில் சத்தன் சௌக்கி காவல்துறை காலனியில்  வசித்து வருபவர்  அசோக் சவான் அவரது மகள் ஷரவானி சவான் (16 வயது)  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்க்காக சென்றுள்ளனர்.

வீட்டில் தனியாக இருக்கும் தனது மகளின் பாதுகாப்பிற்க்காக பெற்றோர் வீட்டின்  வெளிக்கதவை பூட்டிவீட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது, இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்ப்ட்டு தீயை அணைத்தனர்

முதலில் தீயனைக்க முற்பட்டபோது வீடு பூட்டியிருந்ததால் உள்ளே  யாரும் இருக்க மாட்டார்கள் என நினைத்தவர்களுக்கு பின்னர் பூட்டிய வீட்டினுள் ஷரவானியின் உடல் இறந்த நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இது குறித்து தகவல் கூறிய காவல் துறையை சேர்ந்தவர், முதலில் 37 ஆம் நம்பர் வீட்டில் சிறு மின்சார பழுதினால் தீ பிடித்ததாகவும் பின்னர் அது 36 மற்றும் 38 ஆம் நம்பர் வீடுகளுக்கும் பரவியதாக தெரிவித்தார் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இன்னும் சம்பவ இடத்திற்க்கு வரவில்லை அவர்கள் திரும்பியதும் வீட்டை பூட்டியதை குறித்து விசாரனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்

குறிப்பாக விபத்து நடந்த வீட்டினுள் மண்னெண்னய் பாட்டில் கண்டெடுக்கபட்டுள்ளதால் இது விபத்தா இல்லை, தற்கொலை முயற்சியா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது