மூட்டை மூட்டையாக குப்பையுடன் வந்தால் சுடச்சுட சோறு போடும் ஹோட்டல்! எங்க தெரியுமா?

டெல்லி: பிளாஸ்டிக் குப்பையை கொண்டு வந்து கொடுத்தால் உணவு தரும் ரெஸ்டாரண்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் முனிசிபல் கார்ப்பரேஷன், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கார்பேஜ் கஃபே என்ற பெயரில் ஒரு புதிய உணவு விடுதி அம்பிகாபூரில் தொடங்கப்பட உள்ளது.

இங்கு, பிளாஸ்டிக் குப்பை கொண்டுவந்து கொடுப்பவர்களுக்கு அதன் எடைக்கு நிகரான உணவு வழங்கப்படும். அரை கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பிரேக்ஃபாஸ்ட், ஒரு கிலோ குப்பை கொடுத்தால் இலவச உணவு தரப்படும் என்று, அம்பிகாபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் குறிப்பிட்டுள்ளது. 

அதேசமயம், இதுபற்றி விமர்சனங்களும் எழுந்துள்ளது. அம்பிகாபூரில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் சூழலில், இப்படியான அறிவிப்புகளை வெளியிடுவது எந்த பயனும் தராது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டதாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.