மும்பையில் கிரிக்கெட் வீரர் பவார் கொடூர கொலை! பெண் தோழி கைது! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ராகேஷ் என்பவரை 3 பேர் சேர்த்த கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளது.


35 வயதான கிரிக்கெட் வீரர் ராகேஷ் பவார் என்பவர், மிகவும் கொடுரமான முறையில் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மநபர்கள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக பாண்டுப் பகுதியில் கண்டு எடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த  பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 11.45 மணிக்கு, ராகேஷ் தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மகாவீர் பெட்ரோல் பங்கிற்கு அருகில் சென்ற போது  அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல், ராகேஷை கனமான இரும்பு கம்பியை  வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

பின்பு பலத்த காயம் அடைந்த ராகேஷ் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.  அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே  உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த பாண்டுப் பகுதி போலீசார், ராகேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வந்த பெண்ணிடம் தங்களின் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். இதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அந்த 3 பேரும்  ராகேஷை கொலை செய்வதற்கு முக்கிய காரணமே, இவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே இருந்த முன் பகை  தான் என்று. இருப்பினும் அந்த 3 பேர் யார் என்று போலீசாரால் சரியாக அடையாளம் காண இயலவில்லை.  ஆகவே இந்த வழக்கை பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ராகேஷ் கிரிக்கெட் வீரர் மட்டும் இல்லாமல், அநேக குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சியும் அளித்து வருகிறார்.  இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.