ஒரே நாளில் 2.6 லட்சம் கோடி நஷ்டம் கண்ட மும்பை பங்குச் சந்தை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததை அடுத்து. வாரத்தின் தொடக்க நாளான செவ்வாய் கிழமை. பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் வங்கி , மற்றும் கனரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் கடுமையான சரிவை சந்தித்தன.


முறையே பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலை 8.55% குறைந்து ரூ .59.4 ரூபாயாகவும், இந்தியன் வங்கியின் பங்கு விலை 7.89% குறைந்து ரூ .184.4 ருபாயாகவும், கனரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் முறையே 5% முதல் 9% வரை சரிந்து முடிவடைந்தது.

செவ்வாயன்று சென்செக்ஸ் 769.88 புள்ளிகள் குறைந்து 36,562.91 புள்ளிகளிலும், நிஃப்டி 225.40 புள்ளிகள் குறைந்து 10,797.90 புள்ளிகளிலும் முடிவடைந்தது. இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது, 

கடந்த ஒரு மாத வர்த்தக கணக்கீட்டின்படி. சென்செக்ஸ் 0.4 சதவீதமும், நிஃப்டி 0.85 சதவீதமும் சரிந்துள்ளது. மேலும், ஓரியண்டல் வங்கியின் வர்த்தகம் 7.35% குறைந்து ரூ .68.1 ரூபாயாகவும், கனரா வங்கியின் பங்குகளின் விலை 7.87% குறைந்து ரூ .203.2 ரூபாயிலும் முடிவடைந்தன.

நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 100 புள்ளிகள் சரிந்து 2,376 நிலைக்குக் தள்ளப்பட்டது. இந்நிலையில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் கடுமையாக உயர்ந்து 72 ரூபாயைத் தொட்டுள்ளது. ரூபாயின் தொடர் வீழ்ச்சியால் தங்கம் விலை ரூ .171 ரூபாய் உயர்ந்து, 10 கிராம் 38,987 ரூபாய்க்கு விற்பனையானது.

பலவீனமான சந்தை வர்த்தக பின்னணியில் உள்ள மிகப்பெரிய காரணியாக. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவரிசை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்துள்ளதும், இந்த வீழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலவீனமானது என கணிக்கின்றனர் பங்குச் சந்தை நிபுணர்கள்.

ஆட்டோமொபைல் மற்றும் வங்கிகளின் பங்குகளின் பலவீனமான அளவில் வர்த்தகம் கண்டன. ஆட்டோமொபைல் துறை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான மந்தநிலையை அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஐஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அசோக் லேலண்ட் மட்டுமின்றி பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் அபிரிதமான வீழ்ச்சியை கண்டுள்ளது.

அடுத்ததாக. 250 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், வோக்ஹார்ட், கனரா வங்கி, கே.எஸ்.பி பம்புகள், ஓமாக்ஸ், ஜோதி லேப்ஸ் போன்ற பங்குகள் இதில் அடங்கும்.

அதுமட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆர்.பி.எல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பங்குகளும் இந்த வீழ்ச்சியில் பயணப்பட தொடங்கியுள்ளது. 

பங்குச்சந்தையின் வீழ்ச்சியினால் சுமார் 2.6 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சில்லறை முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறது செபியின் அறிக்கை ஒன்று.

முடக்கிப் போன உள்நாட்டு உற்பத்தி, பலவீனத்தில் வாகன விற்பனை. மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் ஆகியவையோடு தற்போது இந்திய வங்கிகளும் வீழ்ச்சியை கண்டு. நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் நிலமைக்கு தள்ளப்படுள்ளது.

அதுமட்டுமின்றி. செப்டம்பர் 1 ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்தியாவில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 98,202 கோடி வசூலிக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே வேளையில் கடந்த ஜுலை மாதம் 1.02 லட்சம் கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வருவாய் குறைவினை ஈடுகட்ட. அடுத்ததாக என்னவெல்லாம் புதிய வரியை நமது தலையில் சுமத்தப் போகிறார்களோ என ஒவ்வொரு குடிமகனும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..

மணியன் கலியமூர்த்தி