பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற சிறுவன்! கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த குடிகாரன்!

மும்பையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்து ஒன்றில் தூங்குவதற்காக ஏறிய அனாதைச் சிறுவனை கத்தியால் குத்திய குடிவெறியனை போலீசார் தேடிவருகின்றனர்.


அம்பர்நாத் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இரவு பணியை முடித்த பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. தற்காலிக நிழற்கூரையாக எண்ணி அந்தப் பேருந்தில் தூங்குவதற்காக ஏறிய அந்த அனாதைச் சிறுவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை தனக்கு நேரப் போகும் விபரீதம் 

சிறுவன் பேருந்தில் ஏறிப் படுத்த சில நிமிடங்களில் அதில் ஏறிய குடிகாரன் ஒருவன் அந்தச் சிறுவனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அஞ்சிய சிறுவன் அங்கிருந்து தப்பியோட முயன்றதால் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுவனை கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியதில் சிறுவன் காயம் அடைந்தான். 

இதனைத் தொடர்ந்து அந்த நபர் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான குடிகாரனை தேடி வருகின்றனர். 

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான சரவணன் - வரலட்சுமி தம்பதியினருக்கிடையே நீதிமன்ற வளாகத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் சரமாரியாக கத்தியால் குத்தியதில் வரலட்சுமி படுகாயம் அடைந்தார். இதையடுத்து சரவணனை வளைத்துப் பிடித்த வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். வரலட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.