படுக்கை அறையில் கணவன்..! ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் சேர்ந்து செய்த விபரீத செயல்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

மும்பை: குடிகார கணவனை, அவரது மனைவிகள் 2 பேரும் தலையணையால் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மகாராஷ்டிரா மாநிலம், கோரேகான் வெஸ்ட், பகத் சிங் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ வாக்மார். 32 வயதான இவருக்கு, சவிதா (31), சரிதா (26) என 2 மனைவிகள். இந்நிலையில், செக்யூரிட்டி வேலை செய்து வந்த ராஜூ, தினசரி மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்து 2 மனைவிகளையும் டார்ச்சர் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இதன்பேரில் அதிருப்தி தெரிவித்தால், மனைவிகளை அடித்து உதைப்பதும், பாலியல் தொல்லை கொடுப்பதும் ராஜூவின் அன்றாட வேலையாக இருந்துள்ளது. பொறுத்து பொறுத்து பார்த்த மனைவிகள் 2 பேரும், ராஜூவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதன்படி, கடந்த வியாழக்கிழமை இரவு உறக்கத்தில் இருந்த ராஜூவை, தலையணையை வைத்து அமுக்கி கொன்றனர்.

இதுபற்றி ராஜூவின் அண்ணன் போலீசில் புகார் செய்ய, அவர்கள் விரைந்து சென்று, மனைவிகள் 2 பேரையும் கைது செய்தனர். தொல்லை தாங்காமல் இந்த கொலையை செய்ததாக, 2 மனைவிகளும் ஒப்புக் கொண்டனர்.