மனைவியை கொலை செய்து சடலத்துடன் குடும்பம் நடத்திய கணவன்! அதிர வைக்கும் காரணம்!

மும்பை பிரதிக்க்ஷா நகர் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக குடித்துவிட்டு வந்து தன் மனைவியை கொலை செய்து இரண்டு நாட்கள் வீட்டினுள்ளேயே உடலை மறைத்து வைத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பை பிரதிக்க்ஷா நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் பதிகாரி 29 இவர் அப்பகுதியில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு  நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் சுமன் 20 ,என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சஞ்சய்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனாலேயே இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வருவதாக தெரிகிறது.

கடந்த மே மாதம் 19 ஆம் தேதி அன்று சஞ்சய்குமார் எப்போதும் போல குடித்துவிட்டு மிகுந்த போதையில் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது அவரது மனைவி சுமதி உடல்நலக்குறைவால் வீட்டில் படுத்து இருந்துள்ளார்.  அப்போது அவரது மனைவி ஏன் இவ்வாறு குடித்துவிட்டு வருகிறீர்கள். இந்த பணத்திற்கு தனக்கு மருந்து மாத்திரை வாங்கி வந்து இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சண்டை பெரிதானது.

இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தபோது அச்சமயத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய் குமார் தனது மனைவியின் தலையில் பலமுறை பலமாக தாக்கியுள்ளார் இதனால் அவரது மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டது. அப்போது சஞ்சய் குமார் சுய நினைவில் இல்லை மிகுந்த போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. மனைவிக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது மனைவியை எழுப்ப முயன்று உள்ளார் இதையடுத்து அவரது மனைவி எந்த ஒரு அசைவும் இன்றி கிடந்துள்ளார்.

மனைவி  இறந்து விட்டதை அறிந்த உடனே அதிர்ச்சி அடைந்த சஞ்சய்குமார் அவரது உடலை வீட்டினுள்ளேயே மறைத்து வைத்து அங்கேயே இருந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பலர் அவரது வீட்டின் அருகே வந்துள்ளனர் வீட்டின் உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசுவதை பார்த்த ஊர் மக்கள் உடனே அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்றேன் சுமன் என்பவரின் உடலை கைப்பற்றியுள்ளனர்

இதையடுத்து சுமன்  உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து  போலீசார்  அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர் அப்போது சுமனின்  தாயார் மற்றும் அவரது தம்பியிடம்  கேட்டபோது அவர்கள் கூறியதாவது இவ்வாறுதான் அடிக்கடி குடித்து விட்டு வந்து சுமனை சஞ்சய்குமார் கொடுமைப்படுத்துவதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது செக்சன் 302ன் திரு வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் இது குறித்து விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.