வார்த்தைகளால் தந்தை டார்ச்சர்! 6வது மாடியில் இருந்து குதித்த 18 வயது ப்யூட்டிசியன்!

மும்பை: தந்தை திட்டியதால் 18 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையை சேர்ந்தவர் ஆரத்தி தபசே. 18 வயதான இந்த பெண், அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அடிக்கடி வீட்டிற்கு இரவு தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதனை அவரது தந்தை தட்டிக்கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இதன்படி, வீட்டிற்கு தாமதமாக வந்த ஆரத்தியை தந்தை கண்டிக்க, அவர் மன விரக்தி அடைந்துள்ளார்.

உடனடியாக, அவர் குடியிருக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை  மருத்துவமனை கொண்டு சென்றனர்.

எனினும், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.