பெண்கள் ஹாஸ்டலை கலக்கும் பிரா திருடன்! வசமாக சிக்கிய என்ஜினியர்!

மகளிர் விடுதியில் உள்ளாடைகளை திருடிய பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஜோகேஸ்வரியில் உள்ள கவாசாகி பஜாஜ் ஷோருமில் சேவைத்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தவர் ஃபைசல் ஃபயஸ் அகமது சித்தே. இவரது போதைப் பழக்கம் காரணமாக இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து போதைப் பொருள் வாங்குவதற்காக இவர் பல்வேறு இடங்களில் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கோரேகானில் ஒரு மகளிர் விடுதியில் பெரும்பாலும் கால்லூரி மாணவிகளே தங்கிப் பயின்று வருகின்றனர். அந்தவிடுதிக்குள் நுழைந்த ஃபைசல் ஒரு மாணவியின் அறையில் இருந்த மடிக்கணினியை எவருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு தப்பினார். அப்போது பெண்களின் பிரா, பேன்டீஸ் உள்ளிட்ட உள்ளாடைகளையும் அவன் திருடிச் சென்ற விநோதம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் தனது மடிக்கணினியை காணாமல் தவித்த மாணவி விடுதி சி.சி.டி.வி. கேமரா மூலம் திருடனை கண்டுபிடித்தார். அப்போது அவன் உள்ளாடைகளையும் திருடியது தெரியவந்தது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஒரு நபரிடம் விற்றது. தெரிய வந்தது. மடிக்கணினியை வாங்கிய  நபரை கண்டுபிடித்த போலீசார் அவர் அளித்த முகவரியில் ஃபைசலை கண்டுபிடித்து கைது செய்தனர்.