நடு ரோட்டில் மாணவியின் அந்த உறுப்பில் டச்! பிறகு காமுகனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தாதர் ரயில் நிலையத்தில், சனிக்கிழமையன்று கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். தனது தோழிகள் புடை சூழ அந்த மாணவி சென்று கொண்டிருந்தார். அப்போது நடுத்தர வயது ஆண் ஒருவன் திடீரென அந்த மாணவியின் பின்னால் வந்து அவரது அந்த உறுப்பில் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அப்படியே சாலையில் அமர்ந்து கதற ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவரது  தோழிகள் சுதாரித்து உதவிக்கு ஆட்களை அழைத்தனர். விரைந்து வந்தவர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற  ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை சுற்றி வளைத்து விசாரித்தனர்.

இதில், அந்த நபர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித்குமார் என்றும், அவர் கார்பென்டர் வேலை செய்து வந்தார் என்றும் தெரியவந்தது. அத்துடன், கல்லூரி மாணவியை பார்த்ததும் வெறி கொண்ட அந்த நபர் உடனடியாக, அவரிடம் அத்துமீறி, அங்கங்கே கை வைத்து, சீண்டியுள்ளார். இதுபற்றி அந்த மாணவி புகார் அளித்ததை தொடர்ந்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, அமித்குமாரை கைது செய்தனர்.