குப்பைத் தொட்டிக்குள் குழந்தையில் கதறல்! நேரில் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மும்பை: பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை, குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


மும்பையை அடுத்த விரார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள குளோபல் சிட்டியின் ஷாம்சன் பூமி இடத்தில் குப்பைத் தொட்டியில் இருந்து அழுகைக் குரல் கேட்டதன் பேரில், உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, குப்பைத் தொட்டியின் உள்ளே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை, துணி சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விவேக் பாட்டீல் மற்றும் ஸ்வாதி சோலாபுர்கார் ஆகியோருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு,   அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  

இதுபற்றி விரார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் குழந்தை என்பதால், அதனை பிடிக்காமல் பெற்றோர் குப்பைத் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.