பள்ளி தோழியை ஆன்லைன் விபச்சாரியாக்கிய விபரீத தோழன்! அதிர வைக்கும் சம்பவம்!

தோழி என்றும் பாராமல், அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, ஆன்லைனில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நபர் மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 23 வயதாகும் அவர், தன்னுடன் ஒன்றாக படித்த பள்ளித் தோழி ஒருவரை காதலித்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அவர் நிராகரித்துவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை பழிவாங்கும் வகையில், அடிக்கடி வாட்ஸ்ஆப் மூலமாக, மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்திருக்கிறார்.

இதனால், அந்த பெண், அவரை வாட்ஸ்ஆப்பில் பிளாக் செய்துவிட்டாராம். எனினும், ஆத்திரம் தணியாத குறிப்பிட்ட இளைஞர், ஃபேஸ்புக்கில் போலியான ஐடி ஒன்றை தொடங்கி,  தனது முன்னாள் காதலியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, கீழ்த்தரமான கமெண்ட்களை சேர்த்து பதிவிட்டு வந்துள்ளார். மேலும் தான் ஒரு விபச்சாரி தேவை என்றால் அணுகவும் என்று அந்த பெண்ணை போலவே அவரது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார் அந்த நபர்.

இதனை பார்த்த சிலர் செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ரேட் எவ்வளவு எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன்பேரில், குறிப்பிட்ட பெண் போலீசில் புகார் அளிக்கவே, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்த அந்த இளைஞரை கைது செய்தனர்.