ஆற்றில் நண்பர்களுடன் சிறுநீர் கழித்தவருக்கு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

யூரின் விடச் சென்ற வங்கி ஊழியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையை சேர்ந்தவர், 23 வயதாகும் பிரகலாத் வர்வாத்கர். இவர், ராய்காட் அருகே போலாத்புர் தாலுகா பகுதியில் உள்ள சாவித்ரி ஆற்றை ஒட்டிய பகுதியில், தனது நண்பர் ஒருவரது திருமணத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார். அப்போது, ஆற்றங்கரையில், அவரும் நண்பர்களும் சேர்ந்துகொண்டு, சிறுநீர் கழிக்கச் சென்றார்.  

அப்போது, எதிர்பாராவிதமாக, சறுக்கி விழுந்த அவர், ஆற்றில் விழுந்து, மூழ்கி உயிரிழந்தார். இதில், அவரது நண்பர்கள்  இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டனர்.

சமீபத்தில்தான், பட்டப்படிப்பை நிறைவு செய்த பிரகலாத், வங்கி ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். 6 மாதங்கள் கூட முடியாத நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகமடைய செய்துள்ளது.