வாரன் பஃபெட்டை முந்திட்டாராம் முகேஷ் அம்பானி.. இப்பொழுது அவர் உலகின் ஏழாவது பணக்காரரா..?

அவ்வப்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபார்ப்ஸ் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியல் முகேஷ் அம்பானியை ஒரு படி மேலே ஏற்றியுள்ளது.


ஆம், கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட அத்தனை நிறுவனங்களும் அடி வாங்கியிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் மட்டுமே ஏகப்பட்ட முதலீடுகளை பெற்றுள்ளது. அதனால், அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆம், அம்பானியின் நிகர மதிப்பு இன்று 2 பில்லியன் டாலர் உயர்ந்து தற்போது 70.1 பில்லியன் டாலராக உள்ளது.

அதனால், ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் குறியீட்டின்படி மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டை முந்தி உலகின் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளார்.

இப்போது, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மோடி பதவியில் இருக்கும் இன்னும் நான்கு ஆண்டு காலங்களில், முகேஷ் அம்பானி முதல் இடத்தை தொட்டுவிடுவார் என்றே நம்புவோம்.