முகிலன் மீதான செக்ஸ் புகார்! மனைவி பூங்கொடி என்ன சொல்கிறார் தெரியுமா?

தன் கணவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து முகிலன் மனைவி பூங்கொடி விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு பிறகு முகிலனை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி கிடைத்தது. சுமார் 20 நிமிடங்கள் கணவருடன் பூங்கொடி இருந்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது முகிலன் மனைவி பூங்கொடி பேசியதாவது: உணவு, குடிநீர் கொடுக்காமல் முகிலனை சித்திரவதை செய்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்க வேண்டும். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. 

வேண்டும் என்றே இந்த விவகாரத்தில் முகிலனை சிக்க வைத்துள்ளனர். என் கணவர் பெண்களிடம் தவறாக நடக்க கூடியவர் இல்லை. விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். என் கணவர் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். 

ஒரு சமூக போராளி என்றால் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு முகிலன் உதாரணம். போலீசே கடத்தி சென்றுவிட்டு மீண்டும்  தற்போது அழைத்து வந்துள்ளனர். தன்னை கடத்தி வைத்திருந்ததாக முகிலன் கூறியுள்ளார்.

கடத்தி வைத்த இடம் எது என்று தெரியவில்லை என்று முகிலன் கூறுகிறார். முகிலன் மனதளவில் தெம்பாக இல்லை. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் என்ன பேசுகிறார் என்று கூட புரிந்து கொள்ள முடியவில்லை.  இவ்வாறு பூங்கொடி கூறியுள்ளார்.