பொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள்! முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

ஏமன் நாட்டில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலைபார்த்த தீருபாய் அம்பானி துவங்கிய சாம்ராஜ்யம் ரிலையன்ஸ்.


இன்று அதன் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானிதான் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர். 50 பில்லியன் அவரது சொத்து மதிப்பு!.இந்திய மதிப்பில் 3,557,100,000,00 ரூபாய்!.இவளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு தலைமை தாங்கப் போகும்  அடுத்த தலைமுறையை தயார் செய்துகொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி.

அப்பா தீருபாய் உயில் எழுதி வைக்காம இறந்து போனதால் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்குப் பிறகு முகேஷும்,அனிலும் பாகம் பிரித்துக்கொண்டார்கள்.இன்று முகேஷ் அம்பானி உச்சத்தில் இருக்க அனில் கிட்டத்தட்ட திவாலாகி ஜெயிலுக்கு போகும் தருவாயில் முகேஷால் காப்பாற்றப் பட்டார்.அந்த அனுபவமே முகேஷ் தன் மக்களை பட்டை தீட்டுவதில் தீவிரமாக்கி இருக்கிறது.

முகேஷுக்கு மூன்று பிள்ளைகள்.முதல் குழந்தைகளான இஷாவும்,ஆகாஷும் இரட்டையர்கள். இஷா அமெரிக்காவின் யேல் பல்கலையில் படித்தவர்.இவரால் தான் முகேஷுக்கு டெலிகம்யூனிகேஷன் துறையில் ஆர்வம் வந்தது.இப்போது ரிலையன்ஸ் இ.காமார்ஸின் பொறுப்பு இவர்தான்.இஷாவின் கணவர் ஆனந்த் ரியல் எஸ்டெ பார்மசூட்டிக்கல் என்று பிஸி.இரட்டையரில் இன்னொருவரான ஆகாஷ் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர்.

இவர் பிரபல வைர வியாபாரி மேத்தாவின் மகள் சுலேகாவை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவருமே இப்போது ரிலையன்ஸ் ரிட்டைலின் போர்டில் இயக்குநர்களாக பொருப்பேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.மூன்றாவது மகன் ஆனந்துக்கு இப்போது 24 வயதாகிறது.விரைவில் அவரையும் களமிறக்குவார் அம்பானி.

இப்போது முகேஷுக்கு 62 வயதாகிறது.தன் சாம்ராஜ்யத்துக்கு அடுத்த வாரிசுகளை தயார் படுத்தும் வேலையில் மும்முறமாக இருக்கிறார்.விரைவில் ரிலையன்ஸ் மின்னனு வர்த்தகத்தில் முழு மூச்சாக இறங்கப் போகிறது.அதை இளைய அம்பானிகள்தான் தலைமை ஏற்று நடத்தப்போகிறார்கள்.அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு இப்போது பொறுபேற்றுக் கொண்டுள்ள அவரது மகன் ஜெய் அன்சுல் நிறுவனத்தை  வெற்றிப் பாதைக்கு திருப்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.