வந்தாச்சு ஸ்பீடு இன்டர்நெட்! ஒரே நொடியில் ஒரு முழுப்படத்தையும் டவுன்லோடு செய்யலாம்! அம்பானி அறிவிப்பால் இளசுகள் ஹேப்பி அண்ணாச்சி

செப்டம்பர் 5ல் ஜியோ பிராட்பேண்ட் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முகேஷ் அம்பானி


தொலைத்தொடர்புத் துறையில் முதலில் இந்தியாவில் புரட்சி ஏற்படுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. செல்போன் வாங்கவேண்டுமென்றால் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டும் என்ற பிரம்மாண்டத்தை தகர்த்தெறிந்து 500 ரூபாய்க்கு 2 செல்போன் கொடுத்து மிகப்பெரிய தொழில்புரட்சியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி பெரிய புரட்சியைகொண்டுவந்தார்.

அதேபோல் அவரது சகோதரரும் திருபாய் அம்பானியின் மற்றொரு மகனான முகேஷ் அம்பானியும் செல்போன் சேவையில் பல சலுகைகளை வழங்கி மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.

அந்த வகையில் பிராட்பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை சேவையை அனைத்து தரப்பு மக்களும் மிக வேகமாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும் என ஜியோ நிறுவனரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளும் நாடு முழுவதும் உள்ள தலைநகரங்களில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ரிலையன்ஸ் குழுமத்தின் 42வது வருடாந்திர மாநாடு மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முகேஷ் அம்பானி பிராட்பேன்ட் மற்றும் செட் டாப் பாக்ஸ் சேவை செப்டம்பர் 5ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரப் பூர்வமாக தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தில் இணையதளம் வேகம் நொடிக்கு 1 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் அதிகபட்சமாக 150 எம்.பி. வரை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 1 ஜிபி என்பது 1024 எம்பி. இதற்கான மாத சந்தா ரூ.700 முதல் 10,000 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ பைபர் நெட் வாங்குபவர்களுக்கு 4கே டிவி செட் டாப் பாக்ஸ் இலவசம் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.