முதலியார்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு பேட்டி!

நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்....


ஜேகே ரித்தீஷ் மரணம் என்னை மிகவும் பாதித்தது.. ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் என எந்த தமிழக பிரச்சினைகள் குறித்தும் தேசிய காட்சிகளிடம் தமிழக கட்சிகள் எந்தவித உறுதியையும் பெற வில்லை. நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் செல்ல உள்ளேன்

நோட்டாவிற்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்றாலும் ஏன் அதற்கு இவ்வளவு வாக்குகள் வந்தது என்று தேர்தல் ஆணையம் திரும்பிப் பார்க்க வேண்டும். நமது கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்

நான் நோட்டாவின் வேட்பாளர் எனக்கு தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தரவேண்டும் வேண்டுகிறேன் சரத்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் சாதி அடிப்படையில் தான் இங்கு அரசியல் செய்கிறார்கள் நான் முதலியார் இனத்தைச் சார்ந்தவன். என் இனம் சார்ந்த மக்களும் நான் வாக்குக் கேட்கும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்

இங்கு எந்த அரசியல் கட்சியும் சாதி பாராமல் அரசியல் செய்யவில்லை எனவே தான் நானும் இனத்தை அடையாளப்படுத்தும். நீட் தேர்வுக்கு விளக்கு கேட்போம் என அதிமுக கூறுகிறது ஆனால் எங்களிடம் அதிமுக வலியுறுத்தவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார் இது நிச்சயமாக தவறான செயல் அதற்கான தண்டனையை அதிமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்

நீங்களும் சாதி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ஆனந்தராஜ் மறுத்துவிட்டார். ஒருவேளை அதிமுகவில் பதவி கொடுத்தால் நோட்டாவிற்கு வாக்கு கேட்காமல் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதவி வரும்போது சொல்கிறேன் என மழுப்பலாக பதிலளித்தார்

சாதி அரசியல் முன்னெடுப்பு பதவி கொடுத்தால் அதிமுகவிற்கு போக ஆலோசனை என தனது நிலையில் குழப்பம் இருப்பதை செய்தியாளர்கள் மாறிமாறி கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் நடிகர் ஆனந்தராஜ் வேர்த்து விறுவிறுத்து போனார், மேலும் 40 தொகுதிகள் நோட்டாவிர்க்கும் 18 சட்டமன்ற தொகுதிகள் விருப்பம் போல வாக்களியுங்கள் என்றார்.