அன்று நடந்ததும் இதேபோன்ற சம்பவம்தான். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் தான் எத்தனை வித்தியாசம்..?

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் ஞாபகம் இருக்கிறதா..? அன்றைய காங்கிரஸ் அரசு அதனை எப்படி கையாண்டது, இன்றைய உ.பி. வன்முறையை பா.ஜ.க. அரசு எப்படி கையாள்கிறது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் கதிர்வேல்.


நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம் தான். சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் தலைவி சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை. அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.

சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர். உற்றார் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்ய முடிந்தது. டெல்லி முதல்வர் சுடுகாட்டுக்கு வந்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் அங்கு இருந்தார். மாநில பிஜேபி தலைவர்கூட வந்திருந்தார்.

துப்பு துலக்குவதில் தீவிரமாக இறங்கியது போலீஸ். குற்றவாளிகள் அத்தனை பேரும் பிடிபட்டனர். பலாத்கார கொலைக்கு மரண தண்டனை அளிக்க சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது அரசு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 

அது ஒரு காலம் என்று குறிப்பிட்டுள்ளார்.