ஏப்ரல் 18ந் தேதி தமிழகத்தில் எம்பி தேர்தல் - 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்! மே 23ந் தேதி வாக்கு எண்ணிக்கை!

நாடாளுமன்றதேர்தல் தேதி எப்போது என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து வருகிறார்.


முதலில் 21 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ல் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த மூன்று தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் 18ந் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிப்பு.

ஏப்ரல் 18ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றாலும் கூட மே 23ல் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரு மாதத்திற்கு மேல் தமிழக மக்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மார்ச் 19ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மார்ச் 25ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு தமிழகத்தில் கடைசி நாளாகும்.  மார்ச் 26ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்

மே மாதம் 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவகள் அறிவிக்கப்படும்

இதனிடையே தமிழகத்தில் ஏப்ரல் 18 வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். இதே போல் ஏப்ரல் 17ந் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதே போல் ஏப்ரல் 19 குட் பிரைடே அரசு விடுமுறை. பிறகு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை.

இதனால் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ந் தேதி தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்

ஏப்ரல் 29ந் தேதி 4ம் கட்ட தேர்தல்

ஏப்ரல் 23ந் தேதி மூன்றாம் கட்ட தேர்தல்

ஏப்ரல் 18ந் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும்

ஏப்ரல் 11ந் தேதி முதற்கட்டட வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிப்பு

2019 எம்பி தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

தற்போதைய மத்திய அரசின் பதவிக் காலம் ஜூன் 2ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி புதிய அரசை தேர்வு செய்தாக வேண்டும்.

இதனை முன்னிட்டு தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற தகவலை தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் அறிவிக்கிறது. தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் கூட்டாக தேர்தல் தேதியை வெளியிட உள்ளனர்.

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கூறுகிறது. அநேகமாக ஏப்ரல் 27 தமிழகததிற்கு தேர்தல் என்று சொல்கிறார்கள். உ.பி., மேற்கு வங்க மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம்.