பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தாய்! கேட்போர் நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மனைவியே தன்னுடைய 3 வயது குழந்தையை கொன்றதால் ஏற்பட்ட வேதனையை கண்ணீர் மல்க இரங்கற்பா வாசித்துள்ளார் குடும்பத் தலைவர்.


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நாதன் காடர்ன்ஸ் - தமரி குர்னே தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் லைலா என்ற மகள் உள்ளார். மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த தம்பதிக்கிடையே குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்கு பின் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்க சண்டை போட்டு வந்த நிலையில் இருவரும் பிரிந்து செல்லாம் என முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடினர். பின்னர் நியூ சவுத் வேல்ஸ் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நாதன் காடர்ன்ஸ் - தமரி குர்னே தம்பதிக்கு விவகாரத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் 3 வயது குழந்தை லைலா யாருடன் இருக்க வேண்டும் என்ற பிரச்சனை எழுந்தபோது தந்தையிடம் இருக்கலாம் என நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் குழந்தையின் தாய் தமரி குர்னே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி 3 வயது குழந்தையா லாலா சடலமாக வீட்டில் இருந்துள்ளார். அருகில் தாய் மயக்க நிலையில் இருந்துள்ளார் குர்னே. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லைலாவின் உடலை கைப்பற்றியதுடன் மயக்க நிலையில் இருந்த குர்னேவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். குர்னேவின் உடல் குணமானவுடன் மகளை கொலை செய்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து தாய் குர்னே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குழந்தை தந்தையுடன்தான் இருக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெற்ற மகள் என்று பாராமல் கணவர் மீது உள்ள ஆத்திரத்தில் கொன்றதாக தெரிவித்துள்ளார். மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர் மல்க ஒரு இரங்கற்பா வாசித்துள்ளார்.  

அதில் என்னுடைய அன்பு மகளாக இருந்த நீ எப்போதும் என் நினைவில் இருப்பாய், உன்னை சந்தித்தவர்கள் இதயத்திலும் எப்போதும் குடிகொண்டிருப்பாய். ஒவ்வொரு முறை கடலையும் வானத்தையும் பார்க்கும்போது தேவதையான உன் நினைவு மட்டுமே எனக்கு வருகிறது என தெரிவித்தது ஒரு சொட்டு கண்ணீர் நமக்கும் வந்தது உண்மைதான்.