காமம் நம் உடலுக்கு தேவையான ஒன்று! செ••ஸ் ரகசியம் குறித்து பெற்ற மகளுக்கு ஒரு தாய் எழுதிய ஆலோசனை கடிதம்! என்ன தெரியுமா?

சொந்த மகளிடமோ, மகனிடமோ உடலுறவு பற்றி பேசத் தயங்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் உடல் சார்ந்த தேடல் அதிகம் இருக்கும் இந்த உலகத்தில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஒரு தாய், தன்னுடைய மகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.


அன்பு மகளே உடலுறவு என்ற போதைக்கு அடிமையான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். பொதுவாக பெற்றோர்கள் உடலுறவு பற்றி குழந்தைகளிடம் பேசுவதற்கு தயக்கப்படுகிறார்கள். ஆனால் நீ அப்படி இருக்கக்கூடாது உனக்கு உடலுறவு, சமூகம் சம்பந்தமான எந்த கேள்வி வந்தாலும் கேட்கத் தயங்காதே. நீ கேட்பதற்கு தயக்கப்பட்டால் அது வேறுமாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும். 

பொதுவாக ஒருவர் போதையில் இருக்கும்போதுதான் உடலுறவு கொள்ள அதிகம் ஆசைப்படுவதாக கருத்து நிலவுகிறது. உடலுற என்பது உடலுக்கு தேவைப்படும் ஒன்று. நீ உடலுறவு கொள்ளும்போது சந்தோஷமாக இரு. ஆனால் அதற்கு யார் மதிப்பு கொடுக்கிறார்களோ அவரை தேர்ந்தெடு. உன் மீது உண்மையான அன்பும் காதலும் மரியாதையும் கொண்டிருப்பவர்களிடம் மட்டுமே உடலைப் பகிர்ந்து கொண்டால்தான் உடலுறவு வாழ்க்கையில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும்.

சில நண்பர்கள் பழகும்போது உன்னுடைய மனதை குழப்பி உன்னுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுவார்கள். அதற்காக உன்னிடம் பேசும்போது அவரவர்களுடைய காதல் அனுபவங்களை பேசவார்கள். இதுபோன்ற அனுபவம் உன்னிடம் உள்ளதா என கேட்பார்கள்.

நாம் காதலிக்கும் நபருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் உண்டு. காதல் உன்னிடம் நேரத்தையும் உணர்வுகளையும் செலவிட விருப்பப்படும். ஆனால் காமம் உன்னுடனான நேரத்தையும் புரிதலையும் குறைத்துவிட்டு உன் உடலைப் பற்றி மட்டுமே யோசிக்கும்.

சிலர் தாங்கள் காதலிக்கும் நபருடன் உறவு வைத்துக் கொளள அந்த ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ கெஞ்சியாவது உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் அதற்காக மட்டும் நீ யாரிடமும் கெஞ்சாதே…  

உன் காதலனோ, கணவனோ நீ விரும்பாத நேரத்தில் செக்ஸ் வைக்க முயன்றால் வெளிப்படையாக முடியாது என்று சொல்லிவிடு. இந்த விஷயத்தில் யாரும் உன்னை கட்டாயப்படுத்த முடியாது. அப்படி செய்தால் குற்றம். சிலர் பிரச்சனைகள் வரும்போது அதை சமாதானப்படுத்தும் வகையில் செக்ஸ் வைப்பதுண்டு. செக்ஸ் ஆறுதல் தரும்தான். ஆனால் அது தற்காலிகமானது என்பதால் பிரச்சனைகளுக்காக ஓடி ஒளியாமல் தைரியமாக சந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.