ஆந்திராவில் 4 குழந்தைகளுக்கு விஷம் கலந்த காபியை கொடுத்து விட்டு தாயும் அந்த காபியை குடித்த சோக சம்பவம் நடந்துள்ளது.
அம்மா கொடுத்த காஃபி! நம்பி குடித்த 4 குழந்தைகள்! பிறகு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!
ஆந்திர மாநிலம் குர்னூல் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனை இப்படியே நீடித்தால் 4 குழந்தைகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோமோ என்ற வேதனையில் இருந்தார். நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளார்.
தன்னுடைய மரணத்திற்கு பின் குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்பதற்காக விபரீத முடிவு எடுத்தார். காபி போட்டு எடுத்து வந்த வரலட்சுமி அதில் விஷத்தை கலந்து 4 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பாசத்தில்தான் தாய் காபி கொடுக்கிறாள் என்று ஏதும் அறியதாக குழந்தைகள் அவற்றை வாங்கிக் குடித்தனர்.
பின்னர் ஒவ்வொருவராக மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் வரலட்சுமியும் அந்த காபியை குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து 5 பேரும் அக்கம் பக்கத்தார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சிகிச்சை பலன் அளிக்காமல் வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைத்த 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார் பெண்ணின் கணவர், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் அரவணைப்பை இழந்த குழந்தைகளை இனி யார் தத்தெடுத்து உண்மையான பாசத்தை கொடுத்து வளர்க்கப் போகிறார்களோ?