குழந்தையின் வேதனையை காண சகிக்காமல் மாடியில் இருந்து தூக்கியெறிந்து கொலை செய்த தாய்..! - லக்னோ அதிர்ச்சி

இந்தியாவில் லக்னோவில் தனது குழந்தையின் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாததால் பெற்ற தாயை குழந்தையை மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.


லக்னோவைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில்  குழந்தையை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளது என முதலில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தைக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்ற நிலையில் குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் அதற்கு ஆபரேஷன் செய்தால் தான் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அதிகமாக பணம் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் பணத்தை புரட்டி வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளனர். 

இந்நிலையில் குழந்தையின் தாய் தனது குழந்தையை காணவில்லை என அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தேடி வந்துள்ளார் இதையடுத்து மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் இதையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தாய் தனது குழந்தையை மருத்துவமனையில் மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்தது அம்பலமானது.

இந்நிலையில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால்தான் குழந்தையை கொலை செய்து விட்டேன் அவரது வாக்குமூலம் அளித்த நிலையில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே குழந்தையை மாடியில் இருந்து தூக்கி போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.