ஓடும் பேருந்தில் திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட நடுத்தர வயது பெண்! பதற வைக்கும் காரணம்!

மேட்டூர் முன்னாள் இராணுவ வீரர் சந்தானம் , மனைவி அகல்யா. நெத்திமேடு இராணுவ மருத்துவ மனைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.


தனது ஒரே செல்ல மகளான காயத்ரி சில வருடங்களுக்கு முன்னதாக மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனால் உடைந்து போன பெற்றோர் காயற்றியை சேர்த்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையில், மகள் காயத்ரி உடன் அடிக்கடி கணவருக்கு தெரியாமல் பேசிவந்த தாய் அகல்யா, பேருந்தில் வீடு திரும்பும் போது மகள் குடியிருக்கும் ஊரின் பெயர் பலகையை பார்த்துள்ளார்.

ஏற்கனவே மகள் அருகில் இல்லாத மன உளைச்சலில் இருந்த அகல்யா துக்கத்தில் கையில் இருந்த பேனா கத்தியில் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு தகவல் கொடுக்க,

உடனடியாக விரைந்த போலீசார் அகல்யாவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.