உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையை கவ்விய சிறுத்தை! திடீரென விழித்த தாய் செய்த தரமான சம்பவம்!

குடிசை வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த போது ஒன்றரை வயதுக் குழந்தையை தூக்கிச் சென்ற சிறுத்தையை கையால் அடித்தே அந்தக் குழந்தையின் தாய் கப்பாற்றினார்.


முறத்தால் புலியைத் துறத்திய பெண்ணின் கதை போன்று தற்காலத்திலும் புனே அருகே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. புனேவை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகர்  அருகே தோல்வாட் என்ற கிராமம் உள்ளது. இங்கு கரும்பு ஏராளாமான கரும்பு வயல்கள் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வந்து கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் குடிசை அமைத்து தங்குகின்றனர்.

அவ்வாறு குடிசை அமைத்து தங்கிய இளம் தம்பதிகளான திலீப் - தீபாலி ஆகியோர் தங்கள் ஒன்றரை வயது மகனான ஞானேஸ்வருடன் இரவு நேரத்தில் குடிசைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் உள்ளுணர்வில் பொறி தட்ட விழித்தெழுந்த குழந்தையின் தாய் தீபாலி தனது குழந்தையின் தலையை சிறுத்தை ஒன்று பற்களால் தூக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். 

அந்த இளம் தாய் பலம் கொண்ட மட்டும் தன் கைகளால் சிறுத்தையை தாக்க அந்தச் சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு தாயின் மீது பாய்ந்தது. அப்போது அந்தப் பெண் கூக்குரலிட்டூக் கத்தியதை அடுத்து அருகில் உறங்கிய கணவன் விழித்ததோடு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வர தப்பியோடிய சிறுத்தை ஒரு கரும்புக் காட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டது.

தற்போது கிராம மக்களின் புகாரின் பேரில் சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்துள்ளனர்.  ஒன்றரை வயதுச் சிறுவன் ஞானேஸ்வரின் கழுத்து, தலை, கண்ணுக்கு அருகில் என சிறுத்தையின் பற்கள் பதிந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளான்.