மும்பையில் ஒரு பெண்ணின் மகனை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த போலி போலீஸ்காரனை போலீசார் தேடி வருகின்றனர்.
மகனை விடுவிக்க போலீசுடன் படுக்கையை பகிர்ந்த 41 வயது தாய்! ஆனால் பிறகு நிகழ்ந்த பரிதாபம்!

41 வயதான அந்தப் பெண்ணின் மகன் போதை அடிமை என்றும் மகன் தொடர்பான திருட்டு வழக்கு ஒன்றில் ஆஜராக கடந்த 2017-ஆம் அந்தப் பெண் வசாய் நீதிமன்றத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணை சந்தித்த தினேஷ் பார்மர் என்ற நபர் தான் போலீஸ்காரன் என்றும், தான் சொல்லும் இடத்துக்கு வரத் தவறினால் அந்தப் பெண்ணின் மகன் மீது மேலும் பல வழக்குகளை பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி சென்ற அந்தப் பெண்ணை அந்த நபர் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகு அந்த நபர் அழைத்த போதெல்லாம் அந்தப் பெண் செல்ல மறுத்ததால் அந்த நபர் ஃபேஸ்புக்கில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பதிவிட்டு அவதூறு பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணிடம் அதற்கான காரணம் குறித்து அந்தப் பெண்ணின் மகள் கேட்டபோது மனம் உடைந்து அழுத அவர் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற போது மெத்தனமாக இருந்த போலீசார் அந்தப் பெண் தீக்குளிக்கப்போவதாக மிரட்டியதையடுத்து தினேஷ்பார்மர் மீது மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தலைமறைவாக உள்ள தினேஷ் பார்மரைத் தீவிரமாகத் தேடி வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.