என்னோட ஆசை மகளை கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்கள்..! ஆந்திர ஆளுநரிடம் ஒரு தாயின் கண்ணீர் மனு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மனவளர்ச்சி குன்றிய தனது 8 வயது மகளை கருணை கொலை செய்து விடுமாறு கண்ணீர் மல்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளார் ஒரு தாய்.


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருகிறார் ஸ்வர்ணலதா என்ற பெண். இவருக்கு ஜானவி என்ற பெண் குழந்தை இருக்கிறாள். ஆரம்ப குழந்தைப் பருவத்தில் ஜானவி மீது எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் நாளடைவில் குழந்தை ஜானவி மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இல்லாமல் மாறுபட்டு இருப்பதை 4 வயதில் கண்டறிந்தார் ஸ்வர்ணலதா இதையடுத்து மருத்துவரிடம் ஜானவியை அழைத்து சென்று ஆலோசனை பெற்றார் ஸ்வர்ணலதா.

அப்போது மருத்துவர் கூறிய விஷயம் ஸ்வர்ணலதாவின் மனதை பெரிய அளவில் பாதித்தது. அவரது 4 வயது குழந்தை ஜானவியின் மனவளர்ச்சி குன்றி உள்ளதாகவும் அவரை மற்றக் குழந்தைகள் போல் இயல்பு நிலைக்கு மாற்றுவது கடினம் என்றும் மருத்துவர் தெரிவித்ததை அடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதனால் அந்த குடும்பமே தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதையடுத்து தனது குழந்தை மனவளர்ச்சி குன்றியதை பார்த்த ஸ்வர்ணலதா மன உளைச்சலுக்கு ஆளானார். ஆசை ஆசையாக வளர்த்த மகள் கண் எதிரே மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதை பார்த்த ஸ்வர்ணலதா மரணத்திலாவது குழந்தை நிம்மதியாக இருக்க முடிவு எடுத்து கருணை கொலை செய்யும் அளவுக்கு தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.  

ஸ்வர்ணலதாவின் கணவர் மருத்துவ உதவியாளராக பணிபுரியும் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு புதிதாக வந்த மருத்துவர் ராஜலட்சுமி மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை தர அனுமதிக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் அரிச்சந்தினுக்கு சொர்ணலதா ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் மகள் ஜானவியை கருணை கொலை செய்து விட வேண்டும் எனவும் உருக்கமாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். எந்த ஒரு உயிரையும் கொல்வதற்கு ஆளுநர் என்ன ஆண்டவனிடம் இருந்து கூட சம்மதம் வரப் போவதில்லை.