2வது கணவனுடன் உல்லாசமாக இருக்க பெற்ற மகனை பலி கொடுத்த கொடூரி!

வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியில் பெற்ற குழந்தையை தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்துள்ளனர்.


 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி காவ்யா இவர்கள் இருவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு நான்கு வயதில் தருண் என்ற மகனும் உள்ளார். கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

காவ்யா அவரது தாய் வீட்டின் அருகே தனியாக ஒரு வீடு எடுத்து தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் காவ்யா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்துள்ளார். அப்போது நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தியாகராஜன் மற்றும் காவியா இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கணவனை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த காவ்யா மீது தியாகராஜனுக்கு ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காவ்யா அவரது காதல் கணவர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் அருண் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

தருண் இருப்பது தியாகராஜனுக்கு பிடிக்காத நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து 4 வயது குழந்தையை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து ஒருநாள் இரவு குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்து ஒரு சாக்குப்பையில் கட்டி இரவோடு இரவாக அருகில் உள்ள பாலத்தின் அடியில் தியாகராஜன் புதைத்து விட்டு வந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் குழந்தை எங்கே எனக் கேட்ட போது இருவரும் தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளதாக காவ்யா கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த காவ்யாவின் தாய் குழந்தை எங்கே எனக் கேட்டபோது இருவரும் அதிர்ச்சியில் திருதிருவென முழித்துள்ளனர். இதையடுத்து அவரது தாய் அவர்களிடம் கேட்டபோது காவியா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவியா அதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் நிகழ்ந்த சம்பவம் குறித்து கூறி சரணடைந்தார்.

இதையடுத்து அவர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவ்யாவை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த தியாகராஜன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் அவரை தீவிரமாக தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.