19 வயதில் காதல் திருமணம்! பிறகு தகாத செயல்! பெற்ற மகளுக்கு தாய் கொடுத்த கொடூர தண்டனை!

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை, அவரது தாயே தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார்.


புனே அருகே உள்ள பாராமதி நகரில் வசித்து வருபவர் சஞ்சீவணி போபாதே (34 வயது). இவரது மகள், 19 வயதான நிலையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை காதலித்து, சமீபத்தில் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டார். குடும்பம் வறுமையில் வாடும் நிலையில், தனது மகளின் செயலால், சஞ்சீவணி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். 

இந்நிலையில், சில மாத திருமண வாழ்க்கைக்குப் பின்னர், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சஞ்சீவணியின் மகள் மீண்டும் வீட்டிற்கே வந்துவிட்டார். அங்கு வந்த பிறகும், தாயுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். இதில், மன உளைச்சல் அதிகமான நிலையில், சஞ்சீவணி ஒரு முடிவை எடுத்தார். அதன்படி, தனது மகளின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி, கொன்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் மகள் இறந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். 

சில நாள் முன்பாக, சஞ்சீவணியின் மகள், தனது காதல் கணவன் மீது பலாத்கார புகார் கூறியிருக்கிறார். அதன்பேரில், அவரை போலீசாரும் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த வழக்கை வாபஸ் பெற்று, தன்னை மீண்டும் கணவனிடமே சேர்த்து வைக்கும்படி, தனது தாய் சஞ்சீவணியை அவர் நச்சரித்து வந்துள்ளார்.

இதற்கிடையே வேறு ஒரு நபருடன் மகளுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பேரில், மாப்பிள்ளையிடம் இதுபற்றி சஞ்சீவணியும், அவரது கணவரும் நேரில் சென்று பேசியுள்ளனர். எனினும், அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.  இப்படி இடியாப்ப சிக்கல் போன்ற வாழ்க்கையை வாழும் தன் மகளை வேறு வழியின்றி உறங்கும்போது, தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டதாக,

சஞ்சீவணி போலீசில் தெரிவித்துள்ளார்.