திடீர் கைவலி..! கடும் காய்ச்சல்..! மருத்துவமனைக்கு சென்ற தாயின் ஒற்றைக் கை வெட்டி அகற்றம்..! அதிர வைக்கும் காரணம்!

பூச்சிக்கடிக்கு ஆளான தாய், 11 நாட்களாக கோமாவில் போராடும் பரிதாபம்


லண்டன்: 2 குழந்தைகளின் தாய் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 11 நாட்களாக கோமாவில் போராடி வருகிறார். கியரா ஈம்ஸ் என்ற அந்த பெண்ணை சமீபத்தில் பூச்சி ஒன்று கடித்துள்ளது.

இதன்மூலமாக, அவருக்கு Necrotising Fasciitis எனும் தொற்று ஏற்பட்டது. முதலில் அவருக்கு காய்ச்சல் வந்த நிலையில் படிப்படியாக, பூச்சி கடித்த இடது கை முழுக்க அசைவின்றி காணப்பட்டது. பிறகு, அந்த கையில் உள்ள சதைப்பகுதி முழுதாக அழுக நேரிட்டது.

இதன் முடிவாக, அவரது இடது கையை துண்டிக்க நேரிட்டது. அத்துடன் உடல் முழுக்க நிறம் மாறிய நிலையில், அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த 11 நாட்களாக, கோமா நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவர் நினைவு திரும்புவதற்காக, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.