பசியால் பால் கேட்டு அழுத பிறந்த குழந்தை! ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த கொடூர தாய்!

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற இளம் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் மத்திய மும்பையில் உள்ள சியான் பகுதியை சேர்ந்த சுந்தர் கமலா நகரில் நடைபெற்றுள்ளது. இங்கு வசிக்கும் சமா அன்சாரி (25) என்ற இளம்பெண், 16 நாட்கள் முன்பாக, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை, திடீரென சில நாள் முன்பு காணாமல் போனது.

இதன்பேரில், அன்சாரியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.  போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த பிஞ்சு குழந்தை அன்சாரியின் வீட்டின்  பின்புறத்தில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதன்பேரில், போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இதில், குழந்தையின் தாய் அன்சாரி மீது சந்தேகம் வரவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். முடிவாக, குழந்தையை கொன்றதாக, அன்சாரி ஒப்புக் கொண்டார். ஆனால், கொலைக்கான காரணம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

அவரை உடனடியாக கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பின்னர் காவலில் எடுத்து விசாரித்தால், உண்மை தெரியவரும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.  அதே சமயம் குழந்தை பிறந்தது முதலே அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மற்ற குழந்தைகளை காட்டிலும் இந்த குழந்தை அதிகம் பால் தேவைப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பெற்ற குழந்தையை தாய் கொன்று இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் பெற்ற தாயே, பிஞ்சு குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.